logo

"மொபைல் விழிப்புணர்வில் மழலைகள் குரல்"!

மொபைல் போன் விழிப்புணர்வு நாடகம் – Ansha Shine Kids Preschool, Padappai

படப்பை பகுதியில் இயங்கும் Ansha Shine Kids Preschool மழலையர் பள்ளியில், சிறுவர்களுக்காக மொபைல் போன் பற்றிய விழிப்புணர்வு நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் மூலம், குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல் சாதனங்களின் தாக்கம் குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு பெற்றனர். நாடக வடிவில் வழங்கப்பட்ட இச்செய்தி, குழந்தைகளுக்குள் நற்பண்புகளை வளர்க்கவும், டிஜிட்டல் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் பழக்கங்களை ஊக்குவிக்கவும் துணைபுரிந்தது.

அனைத்து பள்ளிகளும் இதுபோன்ற விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி, மாணவர்களுக்கு சிறப்பான அறிவூட்டலையும், சமூக பொறுப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்

10
256 views