logo

அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா.

கம்பம். ஜூலை 15, அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில், சுருளிப்பட்டி அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பாக பெரும்தலைவர் காமராஜர் அவர்களின் 123-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மேகலா மற்றும் உதவி ஆசிரியர் தனசேகரன், சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் கலந்துகொண்டு மாணவர்களிடத்தில், பெரும் தலைவர் காமராஜர் பற்றியும், அவரது எளிமை பற்றியும், அவரது ஆட்சி காலம் குறித்த வரலாற்றை எடுத்துக் கூறி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கைகளால் சீதாப்பழ மரக்கன்று நடவு செய்தும், காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்பு அறம் செய் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா செய்திருந்தார்.

28
2160 views