
கே.கே பட்டி கல்குவாரியில் தனிநபர்கள் குறுக்கீடு. கல்லுடைக்கும் தொழிலாளர்கள் கலெக்டரிடம் புகார்.
தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில்
அரசு வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரியில் தனி நபர்கள் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவதாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரடு பகுதியில்
அரசு வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.
பல வருடங்களாக முன்பு தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த கல்குவாரியில் ஏலம் உரிமை நிறைவடைந்ததால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு கிடந்தது.
அதனைத் தொடர்ந்து இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கல்குவாரி செயல்பாட்டில் இல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவினர், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மூலம் கல்குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதிச்சீட்டினை வழங்கி கல் உடைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல் உடைப்பதற்கு ஏல அனுமதி வாங்கிய கல்லுடைக்கும் தொழிலாளர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று கூடி,
மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதில்,
சங்கிலி கரடு பகுதியிலுள்ள மகளிர் குழுக்கள் பெயரில் செயல்படும் கல்குவாரியை, திமுக, அதிமுக, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த சிலர் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு,
பல வருடங்களாக கல் உடைத்து தொழில் செய்து வாழ்ந்து வந்த தொழிலாளர்களை கல்குவாரிக்குள் அனுமதிக்காமல், தாங்கள் மட்டும்தான் கல் உடைப்போம் ஏற்கனவே கல் குவாரி ஏலம் உரிமம் பெறுவதற்கு நிறைய கடன் தொகைகளை வாங்கி செலவு செய்தோம் மேலும் தாங்கள் உடைத்து தற்பொழுது விற்பனை செய்து வரும் கல்லின் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தக் கடன் தொகையை அடைப்பதற்கே சரியாக போய்விடுகிறது, அதனால் தொழிலாளர்கள் யாரும் குவாரிக்குள் வந்து கல் உடைக்க வேண்டாம், நாங்களே கற்களை உடைத்து விற்பனை செய்து மாதந்தோறும் ஏதோ ஒரு தொகையை உங்களுக்கு தருகிறோம் எனக் கூறி எங்களை கல்குவாரிக்குள் வரவிடாமல் தடுப்பதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கல்குவாரி உரிமம் பெரும் போது அனைத்து தொழிலாளர்களின்
ஒத்துழைப்பு பெற்று அவர்களின் மூலமாகத்தான் சங்கத்தை உருவாக்கி மகளிர் குழு என பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது எங்களை ஏமாற்றிவிட்டு அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.