
ஷைன் சமுதாய கல்லூரியின் சார்பில் செவிலியர்களின் உறுதி ஏற்பு நிகழ்வு
ஷைன் சமுதாயக் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷைன் சமுதாயக் கல்லூரியில் லேம்ப் லைட்டிங் எனப்படும் செவிலியர் படிப்பில் முதலாண்டு சேர்ந்த மாணவர்கள் செவிலியர் படிப்பு முடித்து உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது குறித்த உறுதி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்த உறுதி ஏற்பு விழாவில் ஷைன் சமுதாயக் கல்லூரி நிறுவன தலைவரும் ஷைன் அறக்கட்டளையின் அரங்காவலருமான ஆரோன் மற்றும் அறங்காவலர் திரு அம்மு ஆரோன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து 2025 ஆம் ஆண்டில் செவிலியர் படிப்பு பயில சேர்க்கை பெற்ற மாணவர்களின் உறுதி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஏஞ்சல் ,
ஆதி தமிழர் விடுதலை கட்சியின் பொருளாளர் இளஞ்செழியன், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் மாநில பொது செயலாளர் தயாபேஸ் , பிர்லா கார்பன் நிறுவன மனித வளத்துறை அதிகாரி பெர்னாண்டஸ், தமிழக ஊரக வளர்ச்சி திட்டத்தின் வட்டார தலைவர் நாகராஜ் மற்றும் சிவபாலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விழாவின் இறுதியில் மாணவர்கள் செவிலியர் படிப்பிற்கான உறுதி ஏற்றனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழா முடிவில் ஷைன் சமுதாய கல்லூரியை சேர்ந்த செபாஸ்டின், ஜெமிமா நன்றி கூறினர்.