logo

சீனா தைவான் போர் பதற்றம் - Journalist Gopaal SJ

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்றது. சமீப காலமாக அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. எனவே தைவான் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் பறந்ததையடுத்து, அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது. சமீப காலமாக தைவானை சீனாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை சீனா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, தைவானுடன் எந்தவொரு நாட்டும் தூதரக உறவுகளை வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தாய்வான் எல்லைக்குள் தனது போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அதற்கிணங்க, கடந்த ஒரு நாளில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் காணப்பட்டுள்ளன. இதில் 60 விமானங்கள் தைவான் அறிவித்துள்ள வான்பாதுகாப்பு மண்டலத்தை (ADIZ) தாண்டி, அதற்குள் பறந்துள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தைவான் எல்லையில் நிலவும் போர்ப்பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#china #thaiwan #chinavsthaiwanwar

21
299 views