logo

பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நம்பாக்கம் ஊராட்சியில் முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நான்கான்டு திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையிலும் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் பொன்னுசாமி, பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே சந்திரசேகர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி லோகேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர், மோகன்பாபு, யுவராஜ், கதிரவன் முன்னிலையிலும் பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆர் குமரேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன்,வழக்கறிஞர் சாய் குமார்,நவீன், கமலக்கண்ணன் ஆகியோர் வரவேற்பிலும் நடைபெற்றது.

இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜெ கோவிந்தராஜன், கழக இளம் பேச்சாளர், விக்னேஷ்உதயன்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக், பிரபு கஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கினர். இதில் மாவட்ட துணை செயலாளர் கேவிஜி உமா மகேஸ்வரி,பொதுக்குழு உறுப்பினர் பா செ குணசேகரன்,ராகவன்,, வேல்முருகன், குருமூர்த்தி, ஸ்ரீதேவி, நாகபூஷணம், சீனிவாசன்,ரகு, வேணுகோபால்,கஜேந்திரன்,வெஸ்லி,வாசு,ரவி,ஜெயவே லு,சுப்பிரமணி,விஜயமாலாபாஸ்கர்,யுவராஜ்,சுரேஷ்,சுதாக ர்,பரந்தாமன், பிபகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிவில் பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தன்ராஜ் நன்றி உரையாற்றினார்.

47
1263 views