logo

பூண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கி நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி

திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓதப்பை ஊராட்சியில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையிலும் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே சந்திரசேகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி லோகேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர், மோகன் பாபு, யுவராஜ், கதிரவன் முன்னிலையிலும் பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சி.ராமராவ் பூண்டி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரஞ்சித்,தினேஷ்குமார், கபில்குமார்,தியாகராஜன், கணேசன்,விஸ்வநாதன்,ம னோகரன்,ராஜா வரவேற்பிலும் நடைபெற்றது.

இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி எம் எல் ஏ டிஜெ கோவிந்தராஜன், கழக இளம் பேச்சாளர்கள் ராஜ ராஜேஸ்வரி,விக்னேஷ், உதயன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கினர். இதில் மாவட்ட துணை செயலாளர் கேவிஜி உமா மகேஸ்வரி,பொதுக்குழு உறுப்பினர் பா செ குணசேகரன்,முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், மு.மணிபாலன், ஆ சத்திவேலு, ஜான்பொன்னுசாமி,பால்சுதாகர்,
சித்ராபாபு,ஸ்ரீராம்,வெஸ்லி,
பிரகாஷ்,விஜியன்,சுதாகர், காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி முடிவில் பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எட்வர்ட் துரை நன்றி உரையாற்றினார்.

44
1119 views