logo

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க நோட்டீஸ் விநியோகம்





தேனிய தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பாக, நகர செயலாளர் (தெ) சி பால்பாண்டி ராஜா தலைமையில் திமுகவினர், அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க நோட்டீசை கம்பம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம், தமிழக அரசின் நான்காண்டு சாதனையான, மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றிய நோட்டீசை வழங்கினர்.
மேலும் வார்டுகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் சாதனை நோட்டீசை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் குரு குமரன், அவைத் தலைவர் ராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துபிரபு, துணைச் செயலாளர் அழகுராஜா, இளைஞரணி அமைப்பாளர்
ஹரிஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு பிரதிநிதிகள், கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


2
1662 views