logo

பாலவாக்கத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் கிராமத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் ஜுர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சை யாக நடைபெற்றது. இத்திருக்கோவில் 13 வருடங்களுக்குப் பிறகு புனர்பூசப்பட்டு கோ பூஜை, கணபதி பூஜை, நவ கிரக ஹோமம், சுமங்கலி பூஜை ஆகிவை நடை பெற்றன. பின்னர் முதற் கால பூஜையான பூர்வாங்க பூஜை வாஸ்து சாந்தி மஹா பூர்ணஹீதி இரண்டாம் கால பூஜை காப்பு கட்டு தல் நாடி சந்தானம் மகா தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றன. அருள் சிவம் சிவாச்சாரியார் குழு மந்தி ரம் முழுங்க பூஜை செய்த புனித கலச நீரை நீரை மங்கல இசையுடன் கோவில் வலம் வந்து மூலவர்கள் ஸ்ரீ செல்லியம்மனுக்கும்,

ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ முனுசாமி, ஸ்ரீ சென்சம் மாள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட் டதை பக்தர்கள் கண்டு களித்து ஓம் சக்தி பராசக்தி என முழுக்கமிட்டு அம்மனை தரிசித்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியை கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

15
239 views