logo

தமிழகத்தில் பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு அறிக்கையினை வழங்கி மாணவச் செல்வங்களுக்கான வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டோம். தொடர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டோம்.
மாணவச் செல்வங்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களின் வழியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள். மிகுந்த நம்பிக்கையோடு வருங்காலத்தை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

31
1135 views