திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (05-05-2025 ) பஹல்காமில் அப்பாவி பொது மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பஹல்காமில் அப்பாவி பொது மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டித்தும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானை கண்டித்தும், திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பெருங்கோட்டப் பொறுப்பாளர் முருகானந்தம் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாட்ட நிர்வாகிகள், மற்றும் கட்சியினர் பெரும் அளவில் கலந்துக்கொண்டு பாகிஸ்தானை கண்டித்தும், தீவிரவாதிகளுக்கு கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.