logo

CPIM ன் கட்சியின் சார்பாக மே 1 தினத்தில் தென்காசி மாவட்டம் மற்றும் பல கிராமங்களில் கட்சி கொடி ஏற்றம் நடைபெற்றது ...

உழைப்பாளி மக்களின் உன்னத திருநாளான மே 1 தினத்தில் தென்காசி மாவட்டம் தென்காசி இடைக்கமிட்டி ..ஆய்க்குடி கிளை சார்பில் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆய்க்குடி மேலூரில் மைதானத்தின் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆசிரியர் மாரியப்பன் ஏற்றினார். தென்காசி வட்டாரக்குழு உறுப்பினர் அய்யப்பன் மே தினப் பேருரை ஆற்றினார்..

கீழுர் கிராமத்தில் கொடியை கட்டுமான சங்க நிர்வாகி கருப்பையா ஏற்றினார்....
பேரூராட்சி அலுவலக ம் முன்பு சிஐடியூ கொடியை பேரூராட்சி தூய்மைப் பணியாளர் பரமசிவம் ஏற்றினார்.சிஐடியூ மாவட்ட செயலாளர் மணிகண்டன் மே தின பேருரை ஆற்றினார்.

கம்பிளி ஊராட்சியில் கிளைச் செயலாளர் இசக்கிமுத்து கட்சியின் கொடியை ஏற்றினார்.கிளை உறுப்பினர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்...

ஆய்க்குடி கீழூர் பேரூந்து நிறுத்தத்தில் ஆய்க்குடி கிளைச் செயலாளர் ஆறுமுகம் கொடி ஏற்றினார்...
மாவட்டக்குழு உறுப்பினர் ஆசிரியர் மாரியப்பன் மே தின உரையாற்றினார்.

ஆய்க்குடி மேலூர் பேரூந்து நிறுத்த ஆட்டோ ஸ்டாண்டில் சிஐடியூ கொடியை பொதுத்தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் அய்யப்பன் ஏற்றினார்.
நிகழ்ச்சிகளில் ஆய்க்குடி கிளைத்தோழர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ,சொரிமுத்து, வெங்கடாசலம், நாகராஜன் ஆறுமுகநயினார், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.என்று மக்கள் பணிகள் தாமோதரன் .

17
1100 views