logo

நான்கு பங்காளிகள் காவடி திருவிழா. கிராம மக்களுக்கு கறி விருந்து.

தேவாரம். ஏப்ரல், 15- தேனி மாவட்டம் தேவாரத்தில் நடைபெற்ற நான்கு பங்காளிகள் காவடி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று கிராம மக்கள் 3500 பேர்களுக்கும் கறி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தேனி மாவட்டம் தேவாரம், மூணாண்டிபட்டி, மேலத்தெரு பேச்சியம்மன் கோவிலில் கடசாரி நல்லகுரும்பன், திடியன், காக்குவீரன், உச்சப்பட்டி நான்கு பங்காளிகள் நடத்திய காவடி திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. ஊர் முழுவதும் பந்தலிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வீடுகள் தோறும் பெண்கள் பூக்கோலம், மாக்கோலம் இட்டு அம்மனை வழிபாடு செய்தனர். முதல் நாளில் காவடி ஊர்வலம் நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று பால்குடம், காவடி, இளநீர் காவடி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, கிராம பொதுமக்கள் 3500 பேர்களுக்கும் கறி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூனாண்டி பட்டியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கறி விருந்து நிகழ்ச்சியினை, கம்பம் ஆர்ஆர் பள்ளி தலைவர், ஆர் ராஜாங்கம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கம்பம் நகர செயலாளர் ஆர்.ஜெகதீஷ், தொழிலதிபர் விமல் கண்ணன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தாமோதரன், நகரத் துணைத் தலைவர் செல்லத்துரை சாப்பிட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை M.மகராஜன், M.K போஸ்மணி, P.P ரவி, M. முருகன், C.ரவிச்சந்திரன், P.P பாலன், P.ராஜா, C.ஈஸ்வரன், M.முத்து, S.சரத்குமார், M.ஈஸ்வரன், நவநீதகிருஷ்ணன், M.மனோஜ், கணேசன், மணிகண்டன், மதன்குமார், வடிவேலு செய்திருந்தனர்.

0
812 views