logo

அம்பேத்கர் பிறந்த நாள் விழா. கம்பம் நகராட்சியில் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் நகராட்சியில், அவரது உருவப்படத்திற்கு நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும் அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பேரில்,
கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் சுனோதா செல்வக்குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்தூவி, இனிப்பு வழங்கி சமத்துவ உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள் பார்சி, மணிகண்டன்,விருமாண்டி, சாதிக் அலி, விஜயலட்சுமி, ரோஜாரமணி, வளர்மதி, அன்பு குமாரி, அபிராமி, சாகிதா பானு மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் பிரமுகர்கள் நகராட்சி அதிகாரிகள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

0
1086 views