மக்களின் இசை பாடகர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி மரணம் அடைந்தார் ...
விருதுநகர், ஏப் 11.
தனது இனிய குரல் வளத்தால் தமிழகமெங்கும் மக்களால் கவரப்பட்ட பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவரது சொந்த கிராமத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா, நரி குளம், கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பாடகர் கிருஷ்ணசாமி அவர்கள். தற்போது அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பொதுவுடமைகளின் பாடகர் :
கரிசல் குயில் இசை குழு மூலம் இடதுசாரி மற்றும் தமுஎகச, போன்ற முற்போக்கு மேடைகளில் உழைக்கும் மக்களின் பாடுகளை பாடல்களாக பாடியவர் 1985 முதல் 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதிலும் உள்ள இடதுசாரி மேடைகளில் அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. தற்போது நடைபெற்று முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24,வது அகில இந்திய மாநாட்டிலும் அவரது குரல் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாஸ்திரிய சங்கீத விற்பனர்கள் கூட அதிசயிக்கும் அளவுக்கு செவ்வியல் இசையில் தேர்ந்திருந்தார்.
கவிஞர்களின் எழுத்துக்களுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் :
கவிஞர்கள் பரிணாமன்,நவகவி, ரமணன், வையம்பட்டி.