logo

விபத்தில் சிக்கிய பக்தர்கள் விரைந்து மீட்டு உதவிய முன்னாள் அமைச்சர் மு. பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் கழக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு துறையூரில் இருந்து திருச்சிக்கு திரும்பி வரும் வழியில் பெரமங்கலம் அருகே சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பக்தர்கள் விபத்துக்குள்ளானதை அறிந்த உடன் காயமடைந்த ஐந்து நபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மருத்துவர்களை உடனே தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். மேலும் துறையூர் நகர கழக செயலாளர் அமைதி பாலுவை அழைத்து விபத்துக்குள்ளான நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

கழக பணியில்....
*திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு*

0
1666 views