logo

இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் இரயிவே பாலம் திறப்பு விழா !

மாண்புமிகு மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்களின் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற தமிழகத்திற்கான இரயில்வே திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன். .உடன், நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் திரு. கே.அண்ணாமலை அவர்களும் கலந்துக்கொண்டார்.
சென்னை தாம்பரத்தில் இருந்து சிதம்பரம், திருவாரூர், வழித்தடத்தில் இராமேஸ்வரம் வரை செல்வதற்கான புதிய இரயில் இயக்கப்படுவதற்கு நமது மத்திய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் இரயில் பாலத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்கள் திறந்து வைத்த பிறகு அன்றிலிருந்து இந்த இரயில் இயங்கும்.
இந்த வழித்தடத்தில் உள்ள 8 மாவட்ட மக்கள் பயனடையும் விதமாக, புதிய இரயில் சேவைக்கு ஒப்புதல் வழங்கியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ்ஜி அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
--தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்.

15
1406 views