logo

ஷைன் குளோபல் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி,மார்ச்.26: கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஷைன் குளோபல் அறக்கட்டளை சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஷைன் குளோபல் அறக்கட்டளை சார்பில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக சேவை நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஷைன் குளோபல் அறக்கட்டளையின் சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்து முகாமை ஷைன் குளோபல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஏ.ஆரோன் துவக்கி வைத்தார்.

இந்த முகாமிற்கு ஷைன் குளோபல் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் ஜெமிமா, ச.ஷைன் சமுதாயக் கல்லூரியின் முதல்வர் பிரியதர்ஷினி , துணை முதல்வர் சரண்யா, பார்கவி, மேலாளர் அழகுராஜ் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் புருஷோத்தமன், கனி அரசு ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதோடு அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டது.

21
27317 views