logo

தமிழ் திரையுலக இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48.
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.
இவரது இறப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்களும் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

26
1231 views