தமிழக -மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனையருக்கு பிரத்யேக மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் !
தமிழக முதலமைச்சரின் தலைமையிலான திராவிடமாடல் அரசு, மாற்றுத்திறனாளி வீரர்-வீராங்கனையர், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
அதற்கு உதாரணமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மற்றும் டெமேனோஸ் மென்பொருள் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியுடன், தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைபந்து கழகத்தை (Wheel Chair Basket ball ) 17 வீரர்- வீராங்கனையருக்கு, ரூ.18.82 இலட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளாகவும் , -பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டராகவும் மாற்றத்தக்க வகையிலான பிரத்யேக மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினோம்.
நம் மாற்றுத்திறன் வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளிலும் வாழ்விலும் வெற்றிகளை குவிக்க துணை நிற்போம் என்று வாழ்த்துகிறோம்
-தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.