logo

தேனிமாவட்டம் கூடலூரில் கருப்பசாமி கோவில் 48வது நாள் மண்டல பூஜை : கிடா வெட்டி அன்னதானம்

தேனிமாவட்டம் கூடலூரில் கருப்பசாமி கோவில் 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு கிடா வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டன.
தேனிமாவட்டம் கூடலூர் பொதுப்பணித்துறை பங்களா பின்புறம் யாதவகுலசீலையகும்புகோனார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்றது. நாள்தோறும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று 48 நாள் மண்டல பூஜை நிறைவடைந்ததையடுத்து.கருப்பசாமிக்கு கிடாவெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் கம்பம், கூடலூர், அனுமந்தன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாட்டினை யாதவகுல சீலையகும்பு கோனார் பங்காளிகள் செய்திருந்தனர்.

0
32 views