logo

வந்தேறி ஆரிய கூட்டத்திற்கு தடித்தனம் அதிகமாகிவிட்டது. -பிருங்கிமலை கோபால் சாமிகள் சாடல்

3 ஆயிரம், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாடு இருந்தது.
அதற்கான சான்றுகள் எமது தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

சோழப்பேரரசு, பாண்டியப் பேரரசு, சேரப் பேரரசு மற்றும் கடையெழு வள்ளல்கள் உள்ளிட்ட பல அரசுகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கலாம்.

ஆனால் இது தமிழ்நாடு என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தான் பேரரசுகள், சிற்றரசுகள் என்று தமிழர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தனர்.

250 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு ஏது? இந்தியா என்ற ஒரு சொல் ஏது?

இந்தியா என்பது,
500க்கும் மேற்பட்ட சிற்றரசுகளாக இருந்த பெரும் நிலப்பரப்பை ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் தங்களது பீரங்கிகளின் வல்லுறவால் ஒன்றிணைத்து தங்களது ஆட்சி நிர்வாக வசதிக்காக இந்த மண்ணுக்கு இந்தியா என்று பெயர் சூட்டினார்கள்.

இதுதான் வரலாறு! இதை மூடி மறைத்து தமிழ்நாடு என்பதைத்தான் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள் என்று கதைக்கட்டும் வந்தேறியே!

தமிழ்நாடு தமிழர்களால் தான் கட்டமைக்கப்பட்டது என்பதற்கான சான்றுகளை எமது இலக்கியங்கள் இன்றைக்கும் எடுத்து இயம்புகின்றன.

இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததற்கான சான்றுகளையாவது கொடு பார்க்கலாம்.

வந்தேறி கூட்டத்திற்கு தடித்தனம் அதிகமாகிவிட்டது. -பிருங்கிமலை கோபால் சாமிகள்

#தமிழ்நாடு_தமிழருக்கே!

0
45 views