logo

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்- பிருங்கிமலை கோபால் சாமிகள் வலியுறுத்தல்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்- பிருங்கிமலை கோபால் சாமிகள் வலியுறுத்தல்
********************************
வல்லரசு என்றும் முதலாளித்துவ நாடு என்றும் சொல்லிக் கொள்கின்ற அமெரிக்க ஐக்கிய குடியரசு தன்னிடமிருந்த கல்வி உரிமையை கலைத்துவிட்டு மாகாணங்களுக்கு அந்த உரிமையை பகிர்ந்து அளித்திருக்கிறது.

கல்வி உரிமை மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டால் தான் மென்மேலும் கல்வித்துறை வளரும், அதன் மூலமாக இளைய சமுதாயம் அறிவாற்றலை பெறும் என்ற கருத்தை உள்வாங்கிய அதிபர் ட்ரம்ப் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் மொழி அரசியல் செய்கிறார்கள் என்று உளறக்கூடிய இந்திக்காரர்களே!
மொழி அரசியலை நீங்கள் தான் கையில் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களது மொழியை நாங்கள் படிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்ற நீங்கள் யார்?

எங்களது மொழியை நீங்கள் படிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோமா அல்லது நீங்கள் அதை ஏற்பீர்களா?

தமிழ்நாடு அரசாவது இதுவரை கல்வி உரிமை மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறதா?

அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்களா?

கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மாநில பட்டியலுக்கு வந்தால் மாநிலங்களும் முன்னேறும், இந்தியாவும் முன்னேறும் என்பதுதான் கள நிலவரம்- பிருங்கிமலை கோபால் சாமிகள்

சனாதனத்தை வேறருப்போம் சங்கிகளை கருவறுப்போம்
#கல்வி

1
0 views