logo

கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா

கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி,மார்ச்.
22: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தமிழகத்தில் சிறப்பான பள்ளிகளில் ஒன்றாகவும், தமிழகத்தின் சிறந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதையும் பெற்ற பள்ளி ஆகும்.

இந்த பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் புருஷோத்தமன் , பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.மணியம்மாள் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பி.திரிபுரசுந்தரி வரவேற்றார்.


தொடர்ந்து விழாவில் உதவி ஆசிரியை ஜெ.லீமாபிளாரன்ஸ் ஆண்டு அறிக்கை வாசித்தார். இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கே.இ.திருமலை, கே.ஜி.நமச்சிவாயம், வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், ஜி.சுதா, சிவகாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் என்.ஏழுமலை, இ.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட திட்டக்குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசும் போது, தமிழக அரசு பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றவர். தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட பட்ஜெட்டில் 25சதவீதம் கல்வி துறைக்கே ஒதுக்கியதில் இருந்து கல்விதுறையில் தமிழகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர் பெண்களின் உயர் கல்வியை வளர்க்க பெண்களுக்கு மாதம் 1000ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் பெண்கள் 33சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மாணவர்களின் உயர்கல்விக்காக தமிழ் புதல்வன் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது என்றார்.

தொடர்ந்து பேசியவர் கடந்த நான்கு ஆண்டுகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் 120 பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறியவர், மாணவர்கள் கல்வியில் சிறப்புற்றுகளாய் திகழ அவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினார் .தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் தமிழக அரசின் கல்வித் துறை சார்ந்த திட்டங்கள் குறித்த நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி, உதவி ஆசிரியை லீமா பிளாரன்ஸ், பள்ளி ஆசிரியர்கள் குணசீலா, கோடீஸ்வரி, ரேவதி, தீபா மற்றும் விழா குழு உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

1
0 views