logo

கம்பம் தெற்கு நகர் கழக திமுக சார்பில் எல்லோரும் நம்முடன் வாட்சப் குரூப்பில் குழுவில் பொதுமக்களை இணைக்கும் பணி தீவிரம்

டிஜிட்டல் காலத்தில் மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட இணையதள பக்கங்களை அதிகமாக பயன்படுத்தி வருவதால் திமுக-வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட்டு வருகிறது. மேலும், தகவல் தொழில் நுட்ப அணி திமுக-வின் செய்திகளை இணையதளங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வருகிறது. தலைமைக்கும் கடை நிலை நிர்வாகிகளுக்குமிடையேயான நேரடித்தொடர்பை உருவாக்கிடவும், எதிர்கட்சிகளின் குறைகளையும் மக்களிடம் நேரடியாக சென்று சுட்டிக்காட்டி கழகத்தை வலுப்படுத்தி நிலையான மக்களாட்சி தமிழகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் தகவல் தொழில்நுட்ப அணியினர் சார்பில் எல்லோரும் நம்முடன் என்ற நோக்கத்திற்காக திமுக- சார்பில் இந்த வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுகவினர் மட்டுமின்றி வாக்களர்களை இணைத்து வருகின்றனர். அதன்படி தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் கம்பம் திமுக தெற்கு நகர பொறுப்பாளர் பால்பாண்டியராஜா தலைமையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் குரு.குமரன் முன்னிலையில் கம்பம் பார்க்ரோடு, உழவர்சந்தை பகுதியில் உள்ள வணிகர்கள்,சாலையோர வியபாரிகள் பொதுமக்களை வாட்சப் குழுவில் இணைத்தனர்.இது குறித்து கம்பம் தெற்கு நகர பொறுப்பாளர் பால்பாண்டியராஜா கூறுகையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின அதிகாரப்பூர்வ வாட்சப் குழுவில் இணைவதன் மூலம் தமிழ்நாட்டின் அரசியல், நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்றார்.இந்நிகழ்ச்சியில் கம்பம் தெற்கு நகர அவைத்தலைவர் ராஜன் , தெற்கு நகர் கழக துணை செயலாளர் அழகுராஜா, மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளர் சசி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சித்திரேசன் , மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கத்தி சேகர், 9.சிவாய கிரி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பேச்சாளர் முருகன் , தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் திலீப் , நகர கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை வெற்றி அமைப்பாளர் கலைச்செல்வன் ,விக்னேஷ், ஹரிஷ்குமார் , வார்டு செயலாளர்கள் ஜாமல், சிவகுமார் ,மணி, முருகன், ஞானசேகர், காந்தி ,விருமாண்டி , இந்திரா ,ராஜாமணி ,நாகராஜ் ,உதயக்குமார் , பன்னீர் , பாலு ,தெற்கு நகர தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் நரேந்திரன் , ராஜேஷ் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

8
2036 views