ஊத்துக்கோட்டை வருகை தந்த மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்த திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்கத்தினர்
ஊத்துக்கோட்டையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பொது மக்களின் மனுக்களை பெற்று தீர்வுகாண வந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக திருவள்ளூர் மாவட்ட தலைவர் J.ஆஞ்சநேயலு அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் V.வெங்கடாதிரி. திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் எஸ்.ஞான பழனி, மாவட்ட பிரதிநிதி இழிபரந்தாமன், எல்லாபுரம் ஒன்றியதலைவர் J.துளசிராமன், திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் பிரபு. N.செல்வம், S.ராஜா. பிரபாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அருள்வளவன் ஆரோக்கிய தாஸ் அவர்கள் முன்னிலையில் விவசாயம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக மனுக்கள் அளிக்கப்பட்டன.