ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்
திருத்தணியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். இருவரின் உடைமைகளில் சோதனை செய்தபோது, 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ராயபுரத்தைச் சேர்ந்த அஜீஸ் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் என்பது, இவர்கள் ஒடிசாவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.