logo

300 குடும்பங்களின் மின்சார பயன்பாட்டிற்கு புதிய இரண்டு மின்மாற்றி திறந்த வைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் ஊராட்சியில் புதிய இரண்டு மின் மாற்றிகளை 300 குடும்பங்களுக்கு திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கே சந்திரசேகர் ஆலோசனையின் படி இன்று பூண்டி ஒன்றிய துணைச் செயலாளர், முன்னாள் போந்தவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பாபு முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் புதிய மின்மாற்றியை அமைத்து செட்டி தெரு, முத்திரையர் தெரு, கைக்கோளர் தெரு, பழங்குடியினர் தெரு -வில் வசிக்கும் 235 குடும்பங்களுக்கும் அதேபோல் பழைய ஆதிதிராவிடர் காலணி பகுதியில் 65 குடும்பங்களுக்கு ஓம் சக்தி கோவில் அருகே புதிய மின்மாற்றியினை அமைத்து மொத்தம் 300 குடும்பங்களுக்கு மின்சாரத்தை சற்குணம் உதவி செயற்பொறியாளர், குமரகுருபரன் உதவி மின்பொறியாளர் கலந்துகொண்டு மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். உடன் ஸ்ரீகாந்த் ஆக்க முகவர்,சதாசிவம் கம்பியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

59
2977 views