logo

கீமல்லூரில் ரேஷன் கடையை திறந்த எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி,மார்ச்.9: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சி கீமலூர் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான பகுதி நேர ரேஷன் கடையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் ஊராட்சி கீமளூர் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தமிழக அரசின் நியாய விலை கடையில் ரேஷன் பொருட்களை வாங்க ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாஞ்சாலை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.

இந்த சூழல் இப்பகுதி மக்களை பெரிதும் சிரமத்திற்கு ஆளாக்கி நிலையில், பல நேரங்களில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க செல்ல இயலாத சூழலிலும் அவதிப்பட்டனர்.

இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தும் குறிப்பிட்ட அளவு ரேஷன் அட்டைகள் அந்த ஊரில் இல்லாததால் ரேஷன் கடை வர இயலாது என. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது கீமலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் அப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த தமிழக அமைச்சரை சந்தித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பொது மக்களின் சிரமத்தை தெரிவித்து விதிமுறைகளில் இருந்து விலக்கு பெற்று கீமலூருக்கு பகுதி நேர ரேஷன் கடையை கொண்டு வந்தார் .

தொடர்ந்து ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு பெரியபுலியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சுஜானா சுதாகர், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சரவணன், கூட்டுறவு சங்க செயலாளர் ரவிச்சந்திரன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.ரமேஷ், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்துசாமி, தேர்வாய் ஊராட்சி முன்னாள் தலைவர் முனிவேல் , ஒன்றிய துணை செயலாளர் மஸ்தான் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின் அவர் பேசும்போது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஆட்சி ஆக திமுக ஆட்சி உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த விழாவில் கும்மிடிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர் முத்து, திமுக ஆதிதிராவிடர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அருள், திமுக நிர்வாகிகள் ஏசுரத்தினம், கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0
222 views