logo

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா மற்றும் ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி,மார்ச்.2: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி அப்பகுதி மக்கள் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கினர்.

புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் இந்துமதி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ம.செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், கணபதி, வி.எம்.எஸ்.சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஓய்வு பெற்ற தடயவியல் துறை துணை இயக்குனர் பொன்.எட்டியப்பன் பங்கேற்றனர்.

இந்த விழாவை ஒட்டி புதுகும்மிடிப்பூண்டி மக்கள் அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு 1லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உபகரணங்களை கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவில் தலைமை ஆசிரியர் இந்துமதி ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கல்வி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த ஆண்டு விழாவை ஒட்டி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

49
3709 views