மக்கள் பங்கேற்கதக்க ஊரக திறனாய்வு நிகழ்வு நடத்திய ஜெயா வேளாண்மை கல்லூரி மாணவிகள்
அரக்கோணம் அடுத்த வியாசபுரம் கிராமத்தில் உள்ள ஜெயா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மோ.ஹாசினி, கு. இலக்கியா, மோ. ஜெய்ஸ்ரீ, மு.ஜெயசரண்யா, ரா.ஜெய ஸ்ரீ, ஜா.ஜெரோபின் மோனிக்கா, கா.சு. காவிய தர்சனா, ச.பா. கவிநந்தினி, சோ.கீர்த்திகா பாய் ஆகியோர், பேராசிரியர் திரு.ர. நீலமேகம் தலைமையில் கனகம்மாசத்திரம் கிராமத்தில் 3 மாதங்கள் தங்கி பயில உள்ள நிலையில் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சி திட்டத்தில் விவசாயிகளிடையே ஊரக திறனாய்வு நிகழ்வு நடத்தினர். மாணவிகள் தானம் அறக்கட்டளை உடன் இனைந்து காஞ்சிபாடி கிராமத்தில் இப்பயிற்சியை ஏற்பாடு செய்தனர். களஞ்சிய வயலக உறுப்பினர்கள் கிராம வரைபடம், பருவகால நிலை மாற்ற வரைபடம் மூலம் கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் (22/2/25).