கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து பயணத்திற்காக காத்திருக்கும் ஏழை மக்களுக்கு
கூடலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து பயணத்திற்காக காத்திருக்கும் ஏழை மக்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்காததால் வயதானவர்கள் நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அரசு பேருந்து பயணத்திற்காக இருக்கை வசதி இல்லாமல் கால் கடுக்க நின்றுக்கொண்டே இருப்பது போக்குவரத்து துறையால் தரக்கூடிய தண்டனையாகவே கருத வேண்டியுள்ளது. அரசு பேருந்துகளை பயன்படுத்துபவர்களும் நுகர்வோர்களே அவர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்காமல் இருப்பது நுகரவோர் உரிமையை பறிக்கும் செயலாகும். இதற்கு நுகர்வோர் சட்டப்படி நடவடிக்கை கூட எடுக்கலாம். எனவே பொதுமக்கள் சிரமத்தை போக்க உடனடியாக இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்மந்தப்பட்ட துறை முன்வர வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்.