
‘Bad Girl’ திரைப்படத்தை தடை செய்ய கோரிக்கை – NSUI தேசிய அமைப்பாளர் அப்துல் சலாம் கருத்து
குடிப்பழக்கம் மற்றும் பாலியல் அனுபவங்களை ஊக்குவிக்கும் ‘Bad Girl’ படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் – இளைஞர்களின் எதிர்காலத்துக்காக வேண்டுமென வலியுறுத்தல்
அகில இந்திய மாணவர் காங்கிரஸ் (NSUI) சமூக ஊடக பிரிவு தேசிய அமைப்பாளர் அப்துல் சலாம், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘Bad Girl’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது X (முன்னாள் ட்விட்டர்) வலைத்தளத்தில் பதிவு செய்த அவர், பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் குடிப்பழக்கம் மற்றும் பாலியல் அனுபவங்களை ஊக்குவிக்கும் இந்த படம் இளைஞர்களின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
அவரது கருத்தில், “இந்த திரைப்படம் சமூகத்திற்கு எந்தச் செய்தியை அனுப்புகிறது? பள்ளி மாணவர்களின் நல்வாழ்வுக்கு இது பாதிப்பை உண்டாக்கும். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த படத்தை தடை செய்ய வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் வெற்றிமாறனின் குடும்பம் முதலில் இந்த படத்தை பாருங்கள். பின்னர் இதை வெளியிட வேண்டாம் என்பதை அவர்களே உணர்வார்கள்,” என்றார்.
அப்துல் சலாம் தனது கருத்தின் முடிவில், சமூக நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
X Post Link : https://x.com/salammass1/status/1883949081237901684?s=46&t=uP5mPp91J6VFfN8-1LPxsQ