மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தலைமையில் ஓம்சக்தி நகரில் தார் சாலைக்கான பூமி பூஜை.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பாஞ்சாயத்திற்குட்பட்ட 8 வது வார்டு ஓம்சக்தி நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள 400 மீட்டர் தார்சாலை அமைக்க மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 5லட்சம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மணிமேகலை மகேந்திரன்,முன்னால் வார்டு உறுப்பினர்கள் ரேவதி கண்ணப்பன்,கிளை செயலாளர் எல்.பன்னீர்செல்வம்,பி.எம்.நாகராஜ், பி.எஸ்.ரங்கசாமி, ஊராட்சி மன்ற செயலாளர் மல்லிகார்ஜுன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.