தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா...
சென்னை12 திருவொற்றியூர் வீணஸ் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா. சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம்,உரியடி விளையாட்டு, ஆசிரியர்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா,மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை புதுவை மாவட்ட பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன் அவர்களும், வீணஸ் பள்ளியின் தாளாளர் மரகதமணி அவர்களும், வழக்கறிஞர் சூரிய பிரபா,வார்டு கமிட்டி உறுப்பினர்கள் G.கார்த்திக்,R.சீனிவாசன், A.P.ஆறுமுகம், மாணவ மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,உள்பட, பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.