logo

நியாய விலை கடை புதிய கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் ஏ.கே.எஸ்.

மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம்,பெள்ளேபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் எஸ். ஜெகதீசன் நிதியிலிருந்து
ரூபாய் 11,70,000 புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே‌.சின்னராஜ் கலந்துகொண்டார்.அதுசமயம் மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மணிமேகலை மகேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ் ஜெகதீசன், கூட்டுறவு சங்கம் செயலாளர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் சுரேந்திரன், கவுன்சிலர்கள் ரேவதி கண்ணப்பன், ராமச்சந்திரன்,எஸ்.கே.எஸ்.விஜயக்குமார்,சி.டிசி விஜயன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார்,முன்னால் தலைவர்கள் ஆறுமுகம்,பொன்னுசாமி, குணசுந்தரி,பி.எம்.நாகராஜ்,பி.கே.திருமூர்த்தி,பி.எஸ்.ரங்கராஜ்.பன்னீர்செல்வம்,பாலு,மீசை செல்வராஜ்,மனோஜ் ஸ்ரீ சௌடேஸ்வரி நகர் நிர்வாகிகள், நியாய விலை கடை பணியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0
22 views