logo

சமூக அமைதிக்கு ஆபத்தான சீமான் பேச்சு – NSUI தோப்புத்துறை அப்துல் சலாம் புகார் மனு!


அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல் சலாம், நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்களின் மதவெறி பேச்சுகளை கண்டித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவில், சீமான் தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தையும், அவர்களின் மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி, வெறுப்பை தூண்டும் வகையில் பேசி வருவதை குறிப்பிட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A, 295A மற்றும் 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்துல் சலாம் தனது மனுவில், இதுபோன்ற பேச்சுக்கள் சமூக அமைதிக்கு ஆபத்தாக இருப்பதோடு, மத நல்லிணக்கத்தையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும் என்றார். சீமான் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, சமூக அமைதியை காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது குறித்தே, அவரின் உரிமையானக் கோரிக்கையை தமிழக காவல்துறை மற்றும் அரசாங்கம் அவசரமாக கவனத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என NSUI சார்பில் கோரப்பட்டுள்ளது.

0
177 views