logo

தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருகார்த்திகை விழா

கும்மிடிப்பூண்டி,டிச.13. கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தாட்சாயிணி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தாட்சாயிணி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை ஒட்டி108 சங்குகளால் சிறப்பு சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்வை ஒட்டி கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தான்தோன்றீஸ்வரருக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தான்தோன்றீஸ்வரருக்கு தூபதீப நைவேத்தியம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நந்திக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஷோடச ஆர்த்தி, மகா தீபம் ஏற்றுதல் போன்றவை நடைபெற்றது. இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரதோஷ மூர்த்தி ஆலயத்தில் வலம் வந்தார்.

மேலும் நிகழ்வை ஒட்டி சொக்கபனை எரித்தல் நிகழ்வும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றது. இந்த கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகியுமான துரை.ஜெயவேலு முன்னின்று சிறப்பாக நடத்தினார். மேலும் விழாவில் தேர்வழி கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

5
2471 views