
புதுச்சேரியில் ஜனவரி முதல் அமலாகும் புது ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க.. ஆக்ஷனில் இறங்கும் போலீஸார்
புதுச்சேரி: சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், புதுச்சேரியில் 2025 புத்தாண்டு ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் டாப் 10 லிஸ்டில் புதுச்சேரியும் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். அந்த அளவுக்கு இயற்கையின் எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வார விடுமுறை தினங்கள், பண்டிகை நாட்களில் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி கடற்கரையில் குவிவது வழக்கம்.
புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் கட்டாயம் என்ற திட்டத்தை காவல் துறையினர் அமல்படுத்த உள்ளனர். இதுதொடர்பான கண்காணிப்பு பணிகளில் போக்குவரத்து போலீஸார் இறங்கியுள்ளனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.