logo

கும்மிடிப்பூண்டியில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

கும்மிடிப்பூண்டி,டிச.14; கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் எம்.சம்பத், வழக்கறிஞர் இரா. வேலு, பொதுச் செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர் ஏ.எம்.சேகர், வழக்கறிஞர் எம். சுதாகர், பொருளாளர் பதவிக்கு வழக்கறிஞர் செ.சரவணன் வழக்கறிஞர் ஏ.தீனதயாளன், துணைத் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் சே.ரோஸ் குமார் வழக்கறிஞர் ஜி.வெங்கடேசன், விளையாட்டுத்துறை பதவிக்கு வழக்கறிஞர் மு.செங்கொடி செல்வன், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமரன், எம்.சரண்ராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வழக்கறிஞர்கள் எம்.ரவிக்குமார், எம்.இளையராஜா ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த வழக்கறிஞர் சங்க தேர்தலில் இணை செயலாளர்களாக பி. ராமச்சந்திரன், கே.கோதண்டன், நூலகராக எம்.ஜடராயன், செயற்குழு உறுப்பினராக எம்.கேசவன், இ.சங்கர், டி.சங்கர், ஆர்.சித்ரா, ஆர்.எம்.ராம்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து தலைவர், பொது செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், விளையாட்டுத்துறை பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 128 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் இந்த தேர்தலில் 120 வழக்கறிஞர்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலை ஒட்டி வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கறிஞர் அடையாள அட்டையை காட்டியதும், அவர்களின் விரலுக்கு மை வைத்த பின் ஐந்து பதவிகளுக்கான வாக்கு சீட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வாக்கு பெட்டியில் வாக்கு செலுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நடைபெறும் உண்மையான தேர்தலை போன்று இந்த தேர்தல் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றதும் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவில் கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர் சங்க தலைவராக எம்.சம்பத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். சங்கத்தின் பொதுச் செயலாளராக வழக்கறிஞர் ஏ.எம்.சேகர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். மேலும் வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளராக செ.சரவணன், துணை தலைவராக சே.ரோஸ் குமார், விளையாட்டு துறை நிர்வாகியாக எம்.புருஷோத்தமன் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ஆணையர்கள் முத்துக்குமரன், சரண்ராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிக்குமார், இளையராஜா வெற்றி சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு வழக்கறிஞர்கள் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

0
2856 views