logo

திண்டுக்கல் | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - சிறுவன் உட்பட 7 பேர் பலி!*

*திண்டுக்கல் | தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - சிறுவன் உட்பட 7 பேர் பலி!*

தனியார் ஆம்புலன்ஸ்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி ஆனது நடைபெற்று வருகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளே சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனது. மொத்தமாக நான்கு மாடி கட்டிடம் அந்த மருத்துவமனை. மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் மூலம் தீயை அணைத்தனர்.

தனியார் ஆம்புலன்ஸ்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி ஆனது நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, RTO சக்திவேல், துணை மேயர் ராஜப்பா சம்பவ இடத்திற்கு வந்தனர். 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

லிப்டில் மேலும் 6 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

0
195 views