logo

தேசபக்தியுடன் தொலைநோக்கு பார்வை கொண்டவர் பாரதியார்; தமிழகத்தின் கவுரவம் மகாகவி பாரதியார்; பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதியின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு “பாரதியின் படைப்புகள்” என்ற புத்தகத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்.

திரு.சீனி விஸ்வநாதன் அவர்கள் 50 ஆண்டுகள் கடினமான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணமாக்கும் நோக்கத்தோடும் தமிழ்மொழியின் பொக்கிஷமாகவும் கால வரிசையில் "பாரதி படைப்புகள்" என்கிற பெயரில் 23 பாகங்களாக தொகுத்து பாரதியாரின் வாழ்க்கை வரலாறு முதல் அவரது படைப்புகள் வரையிலான பல்வேறு விஷயங்களை நூலாக வடிவமைத்து இயற்றியுள்ளார்.
தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் வளர்த்த சான்றோர்கள் மீதும் பெருமதிப்பும், பற்றும் கொண்ட பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் டெல்லியில் திரு.சீனி விஸ்வநாதன் அவர்கள் இயற்றியுள்ள கால வரிசையில் "பாரதி படைப்புகள்" என்கிற நூலை வெளியிட்டு மகாகவி பாரதியாருக்கும், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், திரு.சீனி விஸ்வநாதன் அவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனையுள்ள கவிஞர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்த்திருத்தவாதி அவரது வார்த்தைகள் எண்ணிலடங்காத மக்களின் இதயங்களில் சுதந்திர வேள்வித்தீயை சுடர்விட்டு எறியச் செய்து விடுதலை புரட்சியை உருவாக்கியது. அவரது முற்போக்கான சிந்தனைகள் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழையும், தமிழ் வளர்த்த சான்றோர்களையும், தமிழர்களையும் பெருமைப்படுத்தி வரும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து உள்ளார்.
மகாகவி பாரதியாரை பெருமைபடுத்தும் உயர்ந்த லட்சியத்தோடு கால வரிசையில் "பாரதி படைப்புகள்" என்கிற ஒரு பொக்கிஷத்தை தமிழ் மொழிக்கும், வருங்கால சந்ததிகளுக்கும் நூல் வடிவில் வழங்கியுள்ள திரு.சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

15
1900 views