17 ஊராட்சி மன்ற தலைவர்கள் பட்டறிவு பயணம்.
கோவை மாவட்டத்திலிருந்து பட்டறிவு பயணமாக 17 ஊராட்சி மன்ற தலைவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு புறப்பட்டார்கள்.மத்திய, மாநில அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை கௌரவிக்கும் விதமாக 17 ஊராட்சி மன்ற தலைவர்களை தேர்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார்,வடக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார்,பொங்கலூர் தலைவர் நடராஜன்,கெம்மரபாளையம் செல்வி நிர்மலா,நெல்லின் துறை தலைவர் செல்வி,ஓடந்துறை தலைவர் தங்கவேல் உள்ளிட்ட சுல்தான் பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆனைமலை ஊராட்சி மன்ற தலைவர் தேர்வாகி நேற்றையதினம் கோவையிலிருந்து சென்னை சென்றனர்.இன்று காலை அந்தமான் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.இந்த பயணம் குறித்து தலைவர்கள் கூறுகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்திட்டங்களை செயல்படுத்தி விருது பெற்ற ஊராட்சிகளை பட்டறிவு பயணத்தின் மூலம் பார்வை யிடுகிறோம்.இந்த பயணம் டிசம்-2 ம் தேதி வரை இருக்கும் 3ம் தேதி கோவை வருவதாக கூறினார்கள்.