logo

70 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ கட்டணம் இலவசம் புதிய காப்பீடு திட்டம்

Ayushman Vaya Vandana என்ற இந்த புதிய திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பேசிய மோடி, மத்திய அரசின் திட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மைல் கல்லாக அமையும். இதன் மூலம் குடும்பத்தில் முதியோருக்கான மருத்துவ செலவுகள் குறையும் என்பதால் முழு குடும்பமுமே பலன் அடையும் என்று தெரிவித்தார்.

காப்பீடு பலன்கள்:-


70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ரூ. 5 லட்சம் வரையில் கட்டணமில்லா மருத்துவம்

இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை பணமில்லா கவரேஜை வழங்குகிறது.

70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் இந்த காப்பீடு கிடைக்கும்.

உயிருக்கு ஆபத்தான நோய்களான புற்றுநோய்,சிறுநீரக நோய்,இதயம் சம்மந்தபட்ட நோய்,மூட்டு வலி, கல்லீரல் நோய் போன்ற பல நோய்களுக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்

0
1486 views