logo

தமிழகத்தில் ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு மாணவர் காங்கிரஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் ஆளுநரின் அதிகார பசீகத்தை குறித்த கடும் விமர்சனங்களை அகில இந்திய மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தேசிய சமூக ஊடகப்பிரிவு அமைப்பாளர் அப்துல் சலாம் இந்த விவகாரத்தில் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, “தமிழக ஆளுநர் தன்னிச்சையாக, ஏபிவிபி சார்ந்த நபரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் மாநில தலைவர் டாக்டர் சவிதா ராஜேஷின் நியமனம் கல்வி துறையின் சுதந்திரத்துக்கு ஆபத்தானது."

அறிக்கையில், "கேரளாவில் இதே முயற்சிக்கு நீதிமன்றம் தடை விதித்ததை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்" என்றும், "இது தமிழகத்தை காவிமயமாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாகும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த நியமனத்தை தமிழக ஆளுநர் உடனடியாக திரும்ப பெறாவிட்டால் மாணவர் காங்கிரஸ் தக்க பதிலடி வழங்கும்," எனக் கூறியுள்ளார்.

4
466 views