logo

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கும்மிடிப்பூண்டி,அக்.26: கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் விதைகளின் இருப்பு மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் உள்ளது .இதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், விதை கிடங்கு உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளது.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி எம்எல் டி.ஜெ. கோவிந்தராஜன் வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள விதை கிடங்கினை ஆய்வு செய்தார் .

நிகழ்விடத்தில் வேளாண் உதவி இயக்குனர் வெ.டில்லி குமார், வேளாண்துறை உதவி விதை அலுவலர் கணேசன், வேளாண்மை அலுவலர் நவீன் பிரசாத், துணை வேளாண் அலுவலர் பெரியசாமி ஆகியோரிடம் விதை கிடங்கில் உள்ள விதைகள் குறித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கேட்டறிந்தார்.

அப்போது வேளாண் துறை அதிகாரிகள் நடப்பு ரபி பருவ பயிர் விதைகளாக பச்சைப்பயிறு- கோ 8, வம்பன்-5, எள்-விஆர்ஐ4 ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றதாக கூறினார்கள்.

அவ்வாறே நவரை பருவத்திற்கான கோ-55, ஏடிடி53 ஆகிய விதைகள் வழங்கப்படுவதாகவும், விதை கிராமத் திட்டத்தின் படி நெல் இருக்கு கிலோவிற்கு 17.80 ரூபாய், பச்சைப் பயிருக்கு ஒரு கிலோவிற்கு 50 ரூபாயும், நிலக்கடலைக்கான ஜிப்சம் ஒரு பைக்கு 13 ரூபாய் மானிய விலையில் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தேவையான விதைகளை வழங்க வேளாண்துறை தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆடாதொடை, நொச்சி செடிகளை இலவசமாக வழங்கினார் .

இந்த நிகழ்வின் போது வேளாண்துறை உதவி இயக்குனர் வெ.டெல்லி குமார் கூறுகையில் ரபி பருவ பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வருகின்ற நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் ஏக்கருக்கு 518ரூபாயை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என்றார்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம் எல் டி.ஜெ. கோவிந்தராஜன் விவசாயிகளிடம் அவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்கு தடை இன்றி வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், திமுக மாவட்ட நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

5
269 views