logo

7 ம் ஆண்டு பாக்ஸ் கிரிக்கட் போட்டி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பாஞ்சாயத்திற்குட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் V.K.P KING'S அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 7 ம் ஆண்டு Box கிரிக்கெட் இரவு பகல் ஆட்டமாக சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு இரவு வரை நடைபெற்றது.இந்த கிரிக்கெட் போட்டியினை பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் , துணை தலைவர் சுரேந்திரன்,பொன்முடி கணேஷ் குமார்,ஊர் செட்டு மை,எஜமானர் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.இந்த போட்டியில் 30 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உரிய ஊக்கத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.இந்த போட்டியில் முதல் பரிசை வென்ற S.S. BOY சௌடேஸ்வரி நகர். அணி வென்று அதற்கான ஊக்கத்தொகை 10024ரூபாயும்,அதற்கு இணையான 7 அடி கோப்பை வீரர்களுக்கான மெடலும் வழங்கப்பட்டது.இந்த முதல் பரிசை பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் வழங்கினார்.அதற்கு இணையான கோப்பையை பொன்முடி கணேஷ்குமார் வழங்கினார்.இரண்டாம் பரிசை வென்ற A.P.J. பழத்தோட்டம் அணி வென்று 8024 ரூபாயும் இணையாண 6 அடி கோப்பை வழங்கப்பட்டது.மூன்றாம் பரிசை நால்ரோடு சிறுமுகை அணியும், நான்காம் பரிசை லெவன் ப்ரண்ட்ஸ் அணிகள் வென்று பரிசுத்தொகை மற்றும் இணையான கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தை காண, முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்தார்கள்.


கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர் ந.முத்துக்குமார்.

1
1756 views