logo

மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி .

*சென்னை மெரீனா கடற்கரை செல்வோர் கவனத்திற்கு... இன்று போக்குவரத்து மாற்றம்!*

சென்னை மெரீனா கடற்கரையில் இன்று காலை (11am - 1pm) நடைபெறும் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் சிரமமின்றி மெரீனா வந்து செல்லவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காணவும் வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மெரீனா காமராஜா் சாலையில், காந்தி சிலை, போா் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்களை நிறுத்துவதற்கு வாலாஜா சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

திருவான்மியூரில் இருந்து காமராஜா் சாலை வழியாக பாரி முனையை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, அடையாறு சா்தாா் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையைப் பயன்படுத்த வேண்டும். இதேபோல பாரி முனையில் இருந்து திருவான்மியூா் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக அந்த வாகனங்கள், அண்ணாசாலை,தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து வரும் பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டா் நடேசன் சாலை, ஆா்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூா் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இதேபோல கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ஆா்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆா்.கே. சாலை, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.

வணிக வாகனங்கள், காமராஜா் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆா்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு மூடப்படும். விமான சாகச நிகழ்ச்சியைப் பாா்வையிட வாகன ஓட்டிகள் அண்ணா சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலையைப் பயன்படுத்தலாம். வாகன நெரிசலைத் தவிா்க்க மக்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
2054 views
2 comment  
  • R V Ramanan

    Sir how to contact you iam from chennai

  • R V Ramanan

    Sir how to contact you iam from chennai