logo

கிராமிய கலை ஆசிரியருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பாஞ்சாயத்திற்குட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் கிராமிய கலைக்காக கௌரவ டாக்டர் பட்டம் ஆசிய இன்டர்நேஷனல் கல்சர் ரிசர்ச் யுனிவர்சிட்டி மூலம் வெள்ளிக்குப்பம் பாளையத்தை சார்ந்த வி. வி. கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்குப்பம்பாளையம் பொதுமக்கள் சார்பாகவும். ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் நலச்சங்கத்தின் சார்பாகவும், இரணிய நாடக சாபா சார்பாகவும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற கோவிந்தராஜ் அவர்களுக்கு சந்தன மாலை அணிவித்து, கேடையம் மற்றும் நினைவு பரிசை வழங்கி பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இவரை பற்றி அந்த பகுதி மக்களிடம் கேட்ட போது கேவிந்தராஜ்ஜீ அவர்கள் எங்களுக்கு தெரிந்த வரையில் தெருக்கூத்து என்னும் பக்த பிரகலாதன் என்னும் இரண்ய நாடகத்திற்க்காக 53 ஆண்டுகளாகவும், முருகனுக்குடைய வள்ளிக்கும்மி ஆட்டத்திற்காக 43 ஆணடுகளாக பயிற்சி அளித்து வருவதாகவும் அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என 1500 கங்கு மேற்பட்டோர் உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் செட்டுமை, எஜமானர்,மன்ற தலைவர், செயலாளர்,இரணிய நாடக கலைஞர்கள், வள்ளிக் கும்மி கலைஞர்கள், பஜனை குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர் ந.முத்துக்குமார்.

5
3910 views