logo

புதுக்கோட்டை,திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள், முதலை மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்காக 10 பொலிரோ வாகனம் மற்றும் 58 கழிவு நீர் அகற்றும் வாகனங்களையும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 144 நபர்கள் மற்றும் கருணை அடிப்படையில் 27 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

5
4874 views